தமிழ்நாட்டில், நவீன மருத்துவ வசதிகள் மட்டுமன்றி, சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளும் சிறப்பாகக் கிடைக்கின்றன. ஆனால், மருத்துவச் சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், தரமான மருத்துவச் சிகிச்சையைப் பெறும்போது குடும்பத்தின் சேமிப்பில் அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது.
இந்தச் சவாலை சமாளிக்கவும், தமிழ்க் குடும்பங்கள் இன்றும் எதிர்காலத்திலும் அதிக மருத்துவச் செலவுகளை தவிர்க்கவும், கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் ( Care Health Insurance ) நிறுவனம் என் அல்டிமேட் கேர் (En Ultimate Care) என்ற தனித்துவமான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தமிழர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கட்டுரையில், இந்த திட்டத்தைப் பற்றிய முழுமையான விவரங்கள், இதன் சிறப்பம்சங்கள் மற்றும் இத்திட்டம் எப்படி உங்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பைத் தருகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
என் அல்டிமேட் கேர் திட்டம் (En Ultimate Care) என்றால் என்ன?
கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் ( Care Health Insurance ) நிறுவனத்தால் தமிழ்நாட்டு மக்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதான், இந்த என் அல்டிமேட் கேர். இன்றைய காலத்தில் மருத்துவச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. ஒரு சிறிய மருத்துவமனை சிகிச்சைக்குக் கூட பெரிய அளவில் பணம் செலவாகிறது. இத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு பண நெருக்கடியும் இல்லாமல் தமிழர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
இத்திட்டத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயூஷ் ( AYUSH ) எனப்படும் பாரம்பரிய சிகிச்சைகளும் அடங்கும் என்பது கூடுதல் சிறப்பு. இதனுடன் ஆட்டோமேட்டிக் ரீசார்ஜ், வெல்னஸ் டிஸ்கவுண்ட்ஸ், டிஜிட்டல் ஹெல்த்கேர், அன்லிமிட்டெட் போனஸ், லாயல்ட்டி போனஸ் உள்ளிட்ட பலன்களும் இந்தத் திட்டத்தில் உள்ளன.
என் அல்டிமேட் கேர் திட்டத்தின் முக்கியமான பலன்கள்
இரண்டு வகைகள்
இந்த திட்டத்தில் பிளான் எசென்ஷியல் (Plan Essential), பிளான் வேல்யூ (Plan Value) ஆகிய 2 வகைகள் உள்ளன. இந்த இரண்டும் விரிவான பாதுகாப்பு, உங்களின் தேவைக்கேற்ற பலன்கள் மற்றும் கூடுதல் காப்பீடு வாய்ப்புகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
பல்வேறு காப்பீட்டுத் தொகை (Sum Insured Option)
பிளான் எசென்ஷியல் மூலம் ரூ.7 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை காப்பீட்டைத் தேர்வு செய்யலாம். பிளான் வேல்யூ மூலம் ரூ.1 கோடி வரை காப்பீட்டையும், சில தேர்வுகளில் அன்லிமிட்டெட் காப்பீட்டையும் பெற முடியும். இதன் மூலம், உங்கள் குடும்பத்தின் மருத்துவத் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற காப்பீட்டைத் தேர்வு செய்யும் வசதி கிடைக்கிறது.
அன்லிமிட்டெட் ஆட்டோமேட்டிக் ரீசார்ஜ் (Unlimited Automatic Recharge)
நீங்கள் எடுத்திருக்கின்ற ஒரு பாலிசி ஆண்டில் உங்களுடைய காப்பீட்டை முழுவதும் பயன்படுத்தப்பட்டுவிட்டாலும், இத்திட்டம் உங்கள் காப்பீட்டை மீண்டும் வழங்குகிறது. இதனால் ஒரே பாலிசி ஆண்டில் பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அல்லது ஒரே நோய்க்காக மீண்டும் கிளெய்ம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், காப்பீட்டைப் பற்றிய நிதி கவலையை குறைக்க உதவுகிறது.
குமுளேட்டிவ் போனஸ் (Cumulative Bonus)
இந்த பலன் என் அல்டிமேட் கேர் வேல்யூ பிளானில் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், நீங்கள் கிளெய்ம் செய்திருந்தாலும், அடிப்படை காப்பீட்டுத் தொகையிலிருந்து 50% கூடுதல் போனஸாக வழங்கப்படும். அதிகபட்சமாக 100% வரை இந்த போனஸ் கிடைக்கும். மேலும், கிளெய்ம் செய்தாலும் இந்த போனஸ் தொகை குறைக்கப்படாது.
வரம்பில்லா போனஸ் (Unlimited Bonus)
இந்த பலன் எசென்ஷியல் திட்டத்தின் கீழ், முதல் மற்றும் இரண்டாவது பாலிசி ஆண்டுகளில் உங்கள் அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 150% போனஸாக அதிகரிப்பு கிடைக்கும்.
மூன்றாவது பாலிசி ஆண்டு முதல், தொடர்ந்து பாலிசியை புதுப்பிக்கும் ஒவ்வொரு ஆண்டும் 100% அதிகரிப்பு கிடைக்கும். கிளைம் செய்திருந்தாலும் இந்த போனஸ் குறைக்கப்படாது.
ஆம்புலன்ஸ் கவுர் (Ambulance Cover)
இந்த திட்டத்தில் மருத்துவ உதவி தேவைப்படும் அவசர நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது. இதில் சாலை வழி, விமானம், ரயில் மற்றும் நீர்வழி போன்ற பல்வேறு போக்குவரத்து முறைகள் அடங்கும்.
லாயல்ட்டி பூஸ்ட் ( Loyalty Boost )
இதில் தொடர்ந்து 7 ஆண்டுகள் கிளெய்ம் இல்லாமல் பாலிசி தொடர்ந்தால், முதல் ஆண்டில் இருந்த அடிப்படை காப்பீட்டுத் தொகை ( Base sum insured ), உங்கள் காப்பீடுடன் கூடுதலாக சேர்க்கப்படும். இந்த கூடுதல் காப்பீட்டுக்கான காத்திருப்புக் காலம் ( Waiting Period ) தள்ளுபடி செய்யப்படும்.
மருந்து வவுச்சர்கள் ( Medi Vouchers – Renewal )
முதல் முறையாக பாலிசியை புதுப்பிக்கும் போது, காப்பீடு செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ₹250 மதிப்புள்ள இரண்டு மருந்து வவுச்சர்கள் ( Pharmacy Vouchers ) வழங்கப்படும். இந்த வவுச்சர்களை மருந்துகள் மற்றும் Pharmacy செலவுகளுக்குப் பயன்படுத்தி சேமிக்கலாம்.
ஆயூஸ் சிகிச்சை ( AYUSH Treatment )
ஆயூஸ் முறைகளின் கீழ் தகுதியுள்ள சிகிச்சைகளுக்கான கவரேஜ் கிடைக்கும்.
இதில்:
- சித்தா
- ஆயுர்வேதம்
- யோகா
- யுனானி
- ஹோமியோபதி
போன்ற சிகிச்சைகள் அடங்கும்.
இதன் மூலம் பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவச் சிகிச்சை முறைகளில் தகுதியுள்ள சிகிச்சைகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.
முழுமையான பாதுகாப்புக்கான இதர கூடுதல் பலன்கள்
என் அல்டிமேட் கேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம், தமிழ்நாட்டைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் மருத்துவத் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு பாதுகாப்புகளை வழங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள் இதோ.
மருத்துவமனையில் சிகிச்சை (In-Patient Care )
தகுதியுள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கான (Hospitalisation) செலவுகளுக்கு காப்பீட்டு கிடைக்கும். இதன் மூலம் திட்டமிட்ட மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் திடீர் மருத்துவ அவசரநிலைகளால் ஏற்படும் மருத்துவச் செலவுகளை நிர்வகிக்க உதவும்.
டே கேர் சிகிச்சை ( Day Care & Advanced Treatments )
மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்க வேண்டிய அவசியமில்லாத தகுதியுள்ள சிகிச்சைகளுக்கும் காப்பீட்டு கிடைக்கும்.
இதில்:
- கண் புரை அறுவை சிகிச்சை
- கீமோதெரபி
- டயாலிசிஸ்
- கற்களை அகற்றுதல் (Kidney stone removal)
போன்ற சிகிச்சைகளும், குறிப்பிட்ட மேம்பட்ட சிகிச்சைகளும் ( Advanced Technology Treatments ) அடங்கும்.
பணமில்லா சிகிச்சை ( Cashless Treatment )
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல பணமில்லா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் ( Cashless Network Hospitals ) , முன்பணமாக மருத்துவச் செலவை செலுத்த வேண்டிய அவசியமின்றி தகுதியுள்ள பணமில்லா சிகிச்சையைப் பெறலாம்.
Pre- மற்றும் Post-Hospitalisation Expenses
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஏற்படும் குறிப்பிட்ட மருத்துவச் செலவுகளுக்கு 60 நாட்கள் வரை காப்பீடு கிடைக்கும்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ஏற்படும் குறிப்பிட்ட மருத்துவச் செலவுகளுக்கு 90 நாட்கள் வரை காப்பீடு கிடைக்கும்.
இதன் மூலம், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை மட்டும் அல்லாமல், அதற்கு முன்பும் பின்பும் ஏற்படும் மருத்துவச் செலவுகளையும் நிர்வகிக்க உதவும்.
வீட்டிலிருந்து சிகிச்சை ( Domiciliary Hospitalisation )
சில மருத்துவச் சூழ்நிலைகளில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தாலும், உங்கள் உடல்நிலை காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை அல்லது மருத்துவமனையில் படுக்கை ( Bed ) கிடைக்காத நிலை ஏற்படலாம்.
அத்தகைய சூழ்நிலையில், பாலிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டிலேயே வழங்கப்படும் தகுதியுள்ள வீட்டிலிருந்து பெறப்படும் சிகிச்சைகளுக்கான ( Domiciliary Treatment ) செலவுகளுக்கு நிதிப் பாதுகாப்பு கிடைக்கும்.
மேம்பட்ட தொழில்நுட்ப சிகிச்சை ( Advanced Technology Treatment )
மருத்துவமனையில் தங்கியிருந்து மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட மேம்பட்ட தொழில்நுட்ப சிகிச்சைகளுக்களால் ஏற்படும் தகுதியுள்ள செலவுகளுக்கும் நிதிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
உறுப்பு தான காப்பீடு ( Organ Donor Cover )
உறுப்பு தான ( Organ Transplant ) சிகிச்சை, இந்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடைபெறும் பட்சத்தில், தகுதியுள்ள உறுப்பு தானம் செய்பவரின் அறுவைச் சிகிச்சை தொடர்பான செலவுகளுக்கு காப்பீடு கிடைக்கும். இதன் மூலம் Organ Transplant போன்ற முக்கியமான சிகிச்சைகளால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்க உதவுகிறது.
குறிப்பு: நீங்கள் பிளான் வேல்யூ அல்லது பிளான் எசென்ஷியல் எதை தேர்வு செய்தாலும், ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி பலன்கள் உள்ளன. எந்தெந்த பலன்கள் உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவரேஜில் பொருந்தும் என்பதை பாலிசி விவரங்களைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.
என் அல்டிமேட் கேர் காப்பீட்டை அதிகரிக்கும் ஆட் ஆன்ஸ்
என் அல்டிமேட் கேர் திட்டத்தில் விருப்பத்திற்கேற்ப சில Add-ons சேர்த்துக் கொள்ளலாம். இந்த Add ons மூலம் உங்கள் மருத்துவத் தேவைகள், வாழ்க்கை முறை மற்றும் நிதித் தேவைகளுக்கு ஏற்ப பாலிசியை மேலும் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். அவை என்ன என்பது குறித்தும், இதனால் என்ன நன்மைகள் என்ன எனப்து குறித்தும் பார்ப்போம்.
வரம்பில்லா போனஸ் ( Infinity Bonus )
ஒவ்வொரு பாலிசி ஆண்டும், நீங்கள் கிளைம் செய்திருந்தாலும், உங்கள் அடிப்படை காப்பீட்டு தொகையில் (Base Sum Insured ) 100% அதிகரிப்பு கிடைக்கும். தொடர்ந்து பாலிசியை புதுப்பிக்கும் வரை இந்த பலன் கிடைக்கும். மேலும், நீங்கள் கிளைம் செய்தாலும், இந்த ஆட் ஆன் போனஸ் குறையாது.
வருடாந்திர உடல்நல பரிசோதனை ( Annual Health Check-up )
ஒவ்வொரு பாலிசி ஆண்டும், காப்பீடு செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் நெட்வொர்க் மருத்துவமனையில் ஒரு இலவச உடல்நல பரிசோதனை கிடைக்கும். இது பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
காத்திருப்பு காலம் மாற்றியமைப்பு
ஏற்கனவே இருக்கும் நோய்கள், அதாவது Pre-Existing Diseases (PEDs) தொடர்பான காத்திருப்பு காலத்தை ( Waiting Period ) 1 அல்லது 2 ஆண்டுகளாக குறைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் சில நோய்களுக்கு கவரேஜை விரைவாகப் பெற முடியும்.
உடனடி காப்பீடு (Instant Cover )
இந்த வசிதியானது குறிப்பிட்ட சில ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு காப்பீட்டை விரைவாக பெற உதவுகிறது. இந்த Add-on தேர்வு செய்தால், பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 30 நாள் Waiting Period கணக்கிடப்படும்.
குறிப்பிட்ட பட்டியலில் உள்ள அதிகபட்சம் மூன்று நோய்களுக்கு PED Waiting Period தள்ளுபடி செய்யப்படும்.
அந்தப் பட்டியலில்:
- நீரிழிவு நோய்
- உயர் இரத்த அழுத்தம்
- ஆஸ்துமா
- நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD)
- உடல் பருமன்
- உயர் கொழுப்பு ( Hyperlipidemia )
- இதய தமனி நோய் ( Coronary Artery Disease with PTCA)
போன்ற நிலைகள் அடங்கும்.
இது பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
பிரிமீயம் திரும்ப பெறுதல் ( Premium Payback )
தொடர்ந்து 5 ஆண்டுகள் கிளைம் இல்லாமல் பாலிசியைத் தொடர்ந்தால், முதல் பாலிசி ஆண்டில் செலுத்திய பிரீமியம் தொகையை திரும்ப பெறும் பலன் கிடைக்கும்.
அன்லிமெட்டட் கேர் ( Unlimited Care )
உங்கள் Base Sum Insured, Bonus, Additional Sum Insured மற்றும் பொருந்தும் Recharge Benefit ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்ட பிறகு, பாலிசி காலத்தில் ஒருமுறை Unlimited Claim Coverage பெறும் வசதி கிடைக்கும்.
Grace Period Cover
பாலிசியை புதுப்பிக்கப்பட வேண்டிய காலக்கெடு முடிந்த பிறகும் பாலிசி பாதுகாப்பு கிடைக்க உதவுகிறது. இதன் மூலம் உடனடியாக பாலிசி பலன்களை இழக்கும் நிலையைத் தவிர்க்க உதவுகிறது.
டெனியூர் மல்டி பிளையர்
நீங்கள் தேர்வு செய்த பல ஆண்டு பாலிசி காலத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்டிற்கான காப்பீட்டை ஒன்றாக இணைத்து, பாலிசி காலத்தில் ஒரே ஒரு கிளைம்மாக பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.
கிளைம் சீல்டு ( Claim Shield )
பாலிசியில் குறிப்பிடப்பட்ட Annexure I-ன் Lists I, II, III மற்றும் IV-ல் உள்ள தகுதியுள்ள Non-Payable Items, இதற்கான செலவுகளையும் கவரேஜில் சேர்ப்பதன் மூலம், உங்கள் சொந்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டிய செலவுகளை குறைக்க உதவுகிறது.
தங்கும் அறை வாடகையில் மாற்றம் ( Room Rent Modification )
குறைந்த Premium செலுத்தும் வகையில், அதிக செலவு இல்லாத ( Single Private AC ) தனி ஏ-சி அறையை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் தரமான மருத்துவமனைச் சிகிச்சையைத் தொடர்ந்து பெறும் வகையில் உங்கள் பாலிசியைத் தேர்வு செய்யலாம்.
மருத்துவ உபகரணங்கள்
மருத்துவ ரீதியாக அவசியமானதாகவும், டிஸ்சார்ஜ் செய்யும்போது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டதாகவும் இருக்கும் சில உபகரணங்களுக்கு அதிகபட்சம் ரூ. 50,000 வரை ரீ இம்பெர்ஸ்மெண்ட் Reimbursement கிடைக்கும்.
இதில்:
- சக்கர நாற்காலிகள் (wheelchairs )
- செவிப்புலன் கருவிகள் ( Hearing aids )
- ஊன்றுகோல்கள் (crutches)
- எலும்பியல் ஆதரவுகள் ( orthopaedic supports )
- எலும்பியல் சாதனங்கள் ( orthotics )
- அழுத்த காலுறைகள் ( compression stockings )
- ஸ்டோமா பொருட்கள் ( stoma supplies )
- போன்ற பொருட்கள் அடங்கும்.
இது பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
பொது மருத்துவர்களுடன் நேரடி ஆலோசனை
ஒவ்வொரு காப்பீடு செய்யப்பட்ட நபருக்கும், ஒரு பாலிசி ஆண்டில் அதிகபட்சம் 4 முறை நேரடியாக பொது மருத்துவரை ( General Physician ) சந்தித்து ஆலோசனை பெறலாம். ஒவ்வொரு ஆலோசனைக்கும் அதிகபட்சம் ரூ 500 வரை Reimbursement கிடைக்கும்.
நிபுனத்துவ மருத்துவர்களுடன் நேரடி ஆலோசனை
பாலிசியின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியான நிபுனத்துவ மருத்துவர்களுடன் ( Specialist Doctors ) நேரடி ஆலோசனை பெறலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 4 முறை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறும் பலன் கிடைக்கும்.
பிரீமியம் ஃப்ரீஸ் ( Premium Freeze )
முதல் முறையாக இந்த நிறுவனத்தில் பாலிசி வாங்கும்போது, உங்கள் முதன் முதலில் பதிவு செய்யும் வயதை ( Entry Age ) பிரீமியம் கணக்கிடுவதற்காக லாக் செய்து வைத்துக்கொள்ளும் வசதி உள்ளது.
இதன் மூலம், கிளைம் செலுத்தப்படும் வரை, வயது அதிகரித்ததற்காக மட்டும் பிரீமியம் மாற்றப்படாது.
குறிப்பு: Infinity Bonus Add-on, என் அல்டிமேட் கேர் – பிளான் வேல்யூ-க்கு மட்டுமே கிடைக்கும். எனவே இந்த Add-on-ஐ தேர்வு செய்யும்போது பொருத்தமான Coverage Option-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டிற்காக என் அல்டிமேட் கேரை தேர்வு செய்வதற்கான முக்கிய காரணங்கள்
ஹெல்த் இன்ஷூரன்ஸ் தேர்வு செய்வது, மருத்துவமனைச் செலவுகளை மட்டும் கவனிப்பது இல்லை. உங்கள் குடும்பத்தின் உடல்நலம் மற்றும் நிதி நிலைத்தன்மையையும் பாதுகாப்பது முக்கியம்.
என் அல்டிமேட் கேர் நெகிழ்வான கவரேஜ், பல்வேறு பலன்கள் மற்றும் உங்கள் தேவைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யக்கூடிய Add-ons ஆகியவற்றை வழங்குகிறது.
விருப்பத்துக்கேற்ப காப்பீட்டு தேர்வுகள் ( Flexible Coverage Options)
பிளான் வேல்யூ மற்றும் பிளான் எசென்ஷியல் ஆகியவற்றில் பல்வேறு காப்பீட்டுத் தொகை (Sum Insured) தேர்வுகள் உள்ளன. இதன் மூலம் உங்கள் குடும்பத்தின் மருத்துவத் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற பாதுகாப்பைத் தேர்வு செய்யலாம்.
தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவமனைகளுக்கான அணுகல்
தமிழ்நாட்டில் உள்ள முன்னணி மருத்துவமனைகள் உட்பட, இந்தியா முழுவதும் உள்ள பெரிய பணமில்லாமல் சிகிச்சை பெறாக்கூடிய நெட்வொர்க் மருத்துவமனைகள் (Cashless Hospital Network) மூலம் தகுதியுள்ள பணம் செலுத்தாமல் சிகிச்சையைப் பெறலாம்.
இதன் மூலம் மருத்துவ அவசரநிலைகளில் விரைவாகவும் தரமான முறையிலும் சிகிச்சையை பெற உதவுகிறது.
கூடுதல் ரிவார்ட்ஸ்
Pharmacy Vouchers, Annual Health Check-ups மற்றும் Wellness Rewards போன்ற கூடுதல் பலன்களைப் பயன்படுத்தி உங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜிலிருந்து கூடுதல் மதிப்பைப் பெறலாம்.
தேவைக்கேற்ப ஆட் ஆன்ஸ் (Customisable Add-on Covers)
Unlimited Care, Claim Shield, Premium Payback, Instant Cover போன்ற Add-ons தேர்வு செய்து, உங்கள் மருத்துவ மற்றும் நிதித் தேவைகளுக்கு ஏற்ப பாலிசியை விருப்பத்தேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
என் அல்டிமேட் கேர்: வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன், அதன் காப்பீடு ( Coverage ), காத்திருப்புக் காலம் ( Waiting Period ), விலக்குகள் ( Exclusions ) மற்றும் பிற விதிமுறைகளை முழுமையாகப் புரிந்துகொள்வது முக்கியம்.
காப்பீட்டுத் தொகை ஆப்சன்களை புரிந்துகொள்ளுங்கள்
பிளான் வேல்யூ மற்றும் பிளான் எசென்ஷியல் ஆகியவற்றை ஒப்பிட்டு, உங்கள் குடும்பத்தின் மருத்துவத் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள். சில பலன்கள் குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடும்.
காத்திருப்பு காலத்தை தெரிந்துகொள்ளுங்கள்
ஏற்கனவே இருக்கும் நோய்கள் ( Pre-Existing Diseases ), குறிப்பிட்ட நோய்கள் மற்றும் பிற Covered Conditions ஆகியவற்றுக்கு இருக்கும் காத்திருப்பு காலத்தை ( Waiting Period ) கவனமாகப் பாருங்கள்.
இந்த காத்திருப்பு காலத்தைக் குறைக்க உதவும் Add-ons ஏதேனும் உங்களுக்கு பொருந்துகிறதா என்பதையும் பார்க்கலாம்.
நெட்வொர்க் மருத்துவமனைகளை சரிபார்க்கவும்
நீங்கள் சிகிச்சை பெற விரும்பும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், நிறுவனத்தின் பணமில்லாமல் சிகிச்சை பெறும் வசதி ( Cashless Network Hospital ) பட்டியலில் உள்ளனவா என்பதை உறுதி செய்யுங்கள். இதனால் கிளைம் செய்யும் நடைமுறை எளிதாக இருக்க உதவும்.
காப்பீட்டுத் தொகையை சரியாக தேர்வு செய்யுங்கள்
மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், உங்கள் குடும்பத்தின் எதிர்கால மருத்துவத் தேவைகளையும் கருத்தில் கொண்டு போதுமான காப்பீட்டைத் தேர்வு செய்யுங்கள்.
பாலிசியில் விலக்குகளைத் தெரிந்துகொள்ளுங்கள்
மற்ற ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்களைப் போலவே, என் அல்டிமேட் கேர் திட்டத்திலும் சில விலக்குகள் ( Exclusions ) உள்ளன.
இதில்:
- Non-Medical Expenses ( மருத்துவமில்லாத செலவுகள் )
- Cosmetic Procedures (மருத்துவ ரீதியாக அவசியமானவை அல்லாதபோது)
- Self-Inflicted Injuries
மற்றும் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விலக்குகள் ஆகியவை அடங்கும்.
Optional Add-ons மதிப்பீடு செய்யுங்கள்
உங்கள் தேவைக்கு ஏற்ப Infinity Bonus, Unlimited Care, Claim Shield, Premium Payback போன்ற ஆட் ஆன்ஸ்களைத் தேர்வு செய்யலாம்.
உங்கள் மருத்துவ மற்றும் நிதித் தேவைகளுக்கு எந்த Add-on பொருத்தமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு தேர்வு செய்வது முக்கியம்.
குறிப்பு: கவரேஜ், காத்திருப்பு காலம், விலக்குகள் மற்றும் பொருந்தக்கூடிய அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள, பாலிசி வாங்குவதற்கு முன்பு விற்பனைக்கான தகவல் அறிக்கை மற்றும் கொள்கை ஆவணங்கள் மற்றும் பாலிசி பிரவுச்சரை கவனமாகப் படிக்கவும்.
எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்கு தயாராக இருங்கள்
மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொருத்தமான ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டத்தை வைத்திருப்பது முக்கியமானதாகிறது. இந்நிலையில் என் அல்டிமேட் கேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் பல்வேறு மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ற வகையில், நெகிழ்வான திட்டங்கள், பயனுள்ள ரிவார்ட்ஸ் மற்றும் தேவைக்கேற்ப தேர்வு செய்யக்கூடிய ஆட் ஆன்ஸ் மூலம் விரிவான ஹெல்த் கவரேஜை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் குடும்பத்தின் நிதி நிலையைப் பாதுகாக்க விரும்பினாலும், தமிழ்நாட்டில் தரமான மருத்துவச் சிகிச்சையைப் பெற விரும்பினாலும் அல்லது எதிர்பாராத மருத்துவ அவசரநிலைகளுக்கு முன்கூட்டியே தயாராக இருக்க விரும்பினாலும், என் அல்டிமேட் கேர் உங்கள் எதிர்காலத்திற்கான மருத்துவ மற்றும் நிதிப் பாதுகாப்பை ஏற்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் குடும்பத்தின் உடல்நலத்தையும் நிதியையும் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட என் அல்டிமேட் கேர் குறித்து மேலும் தெரிந்துகொண்டு, உங்கள் குடும்பத்தின் தேவைக்கு ஏற்ற கவரேஜைத் தேர்வு செய்யுங்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தத் திட்டத்தின் அம்சங்கள் ( Features ), நலன்கள் (Benefits), காப்பீடு ( (Coverage) மற்றும் கிளைம்ஸ் அண்டர் ரைட்டிங் (Claims Underwriting) ஆகிய அனைத்தும் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. எனவே, பாலிசியை வாங்குவதற்கு முன்பு பாலிசி குறித்தான விரிவான தகவல்களை ( Brochure, Sales Prospectus மற்றும் Policy Documents) ஆகியவற்றை கவனமாகப் படிக்கவும்.